News & Events

21
ஆக2026
பொது மக்களுக்கு ஓர் அவசரமானதும் அவசியமானதுமான தயவான வேண்டுகோள்

பொது மக்களுக்கு ஓர் அவசரமானதும் அவசியமானதுமான தயவான வேண்டுகோள்

நேற்றைய தினம் 20.08.2026 வியாழக்கிழமை பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட மின்னொளி காரணமாக சில பொது மக்களுக்கு பார்வை தொடர்பான அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40 பேர் வைத்தியசாலையை நாடியுள்ளதாகவும் அறியப்படுகிறது. விசேட கண் வைத்திய நிபுணர் திரு.மலரவன் அவர்களின் ஆலோசனைக்கமைய, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக, நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய பொது மக்களும் தங்களது கண்களை...

13
ஆக2026
“ஒளிரும் விடியல்” சுவாபிமானி திரிய தேசிய உற்பத்திகள் – 2026 தேசிய விருது வழங்கும் நிகழ்வு

“ஒளிரும் விடியல்” சுவாபிமானி திரிய தேசிய உற்பத்திகள் – 2026 தேசிய விருது வழங்கும் நிகழ்வு

2026 ஆகஸ்ட் 04 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில், பத்தரமுல்லை, செத்சிறிபாய விளையாட்டு மைதான வளாகத்தில் “சுவாபிமானி திரிய  தேசிய உற்பத்திகள் – 2026” தேசிய மட்ட விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் அடிப்படையில், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தி,...

18
ஜூன்2026
தேசிய மட்டத்தில் சாதனை படைத்த சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்!

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்!

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட, மக்களை மையப்படுத்திய நிர்வாகத்திற்கான "Citizen Mirror: Divisional Productivity Index - 1.0" போட்டியில் எமது பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ​நாடு முழுவதிலுமிருந்து 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றிய இந்த பிரம்மாண்டமான போட்டியில், எமது நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் சேவைக்கான அங்கீகாரமாக இவ்விருது கிடைத்துள்ளது. ​இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் மற்றும் விருது...

18
ஜூன்2026
ஆண்களுக்கான கிளித்தட்டுப் போட்டி

ஆண்களுக்கான கிளித்தட்டுப் போட்டி

"கிளித்தட்டுப் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துச் சாதனை படைத்தது" யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே ஆண்டு தோறும் நடத்தப்படும் அரச அதிபர் வெற்றிக் கிண்ணச் சுற்றுப் போட்டியின் ஒரு அங்கமான ஆண்களுக்கான கிளித்தட்டுப் போட்டிகள் கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பதினாறு அணிகள் பங்கு கொண்ட இந்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான தெல்லிப்பளைப்...

18
ஜூன்2026
பெண்களுக்கான கிளித்தட்டுப் போட்டி

பெண்களுக்கான கிளித்தட்டுப் போட்டி

"சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்ற கிளித்தட்டுப் போட்டிகள்"   "அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டித் தொடரில் கிளித்தட்டுப் போட்டிகள் இடம்பெற வேண்டுமென்ற யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தினரது கோரிக்கைக்கு அமைவாக இடம்பெறும் இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள செயலக ஊழியர்கள் அனைவரும் போட்டிக்குகந்த நுட்பங்களை உணர்ந்து, முயற்சி, பயிற்சி மற்றும் மதிநுட்பத்துடன் வியூகமமைத்து கிராமியப் பாரம்பரியங்களை சமகாலத்திலும் பாதுகாத்து வருகின்றமை மெச்சுதற்குரியது"என அரச அதிபர் புகழாரம். சண்டிலிப்பாய்...

18
ஜூன்2026
அழகான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்

அழகான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட J/150 மாதகல் கிழக்கு கடற்கரை பிரதேசத்தில் "கடலோர தூய்மைப்படுத்தல் தேசிய வேலைதிட்டம்" இன்று (23.05.2026) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய உதவிப்பிரதேச செயலாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக கிராம அலுவலர், சமுர்த்தி முகாமையாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அலுவலர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்,பிரதேச சபை ஊழியர்கள், சமூக மட்ட அமைப்புக்களது அங்கத்தவர்கள், கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்கள்,...

18
ஜூன்2026
ஒரு பட்டாம்பூச்சிக்கு ஒரு வீடு

ஒரு பட்டாம்பூச்சிக்கு ஒரு வீடு

Butterfly & Biodiversity Park ஆரம்ப நிகழ்வு உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதேச செயலகம் – சண்டிலிப்பாய் வளாகத்தில் “Biodiversity Corner” அமைக்கப்பட்டு, Butterfly & Biodiversity Park உருவாக்கும் செயற்பாடு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாகக் கிராம அலுவலர், உதவி மாவட்டப் பதிவாளர், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர்...

02
ஏப்2026
சுரகிமு லங்கா (இலங்கையை காப்போம்) தேசிய நிகழ்ச்சித் திட்டம்!

சுரகிமு லங்கா (இலங்கையை காப்போம்) தேசிய நிகழ்ச்சித் திட்டம்!

'சுரகிமு லங்கா'(இலங்கையை காப்போம்) தேசிய நிகழ்ச்சித் திட்டம்!' சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'சுரகிமு லங்கா' (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த...

23
மார்2026
"Pro Youth" போட்டி

"Pro Youth" போட்டி

தேசிய உற்பத்தித்திறன் செயலகம், தேசிய புத்தாக்க முகவர் நிறுவனத்துடன் இணைந்து, 'உற்பத்தித்திறனுக்காக இளைஞர்களின் முன்யோசனைகள்' எனும் தொனிப்பொருளில் நடாத்தும் "Pro Youth" போட்டிக்காக, 16 -24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் எவரும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத் திகதி 2026.03.31 இப் போட்டி பின்வரும் இரு பிரிவுகளில் இடம்பெறுகின்றது 1) செயற்திட்ட முன்யோசனைப் போட்டி - இளைஞர்களின் பார்வையில் எதிர்காலம் 2) AI காணொளி போட்டி - இளைஞர் எம்...

05
மார்2026
வினாடி வினா போட்டி

வினாடி வினா போட்டி

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்படுகின்ற வினாடி வினா போட்டி       கீழே தரப்பட்டுள்ள 20 வினாக்களுக்கும் விடைகளை எழுதி நாளை 06.03.2026 காலை 11.00 மணிக்கு முன்னராக எமது பிரதேச செயலக வரவேற்புக்கருமபீடத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (வயது எல்லை இல்லை. விரும்பிய அனைவரும் பங்குபற்ற முடியும்) போதைப்பொருள் குறித்த வினாடி வினா   கீழே கொடுக்கப்பட்டுள்ள...

05
மார்2026
கலாதரம் இதழ் - 06

கலாதரம் இதழ் - 06

வலிதென்மேற்கு பிரதேச நூல் வெளியீட்டு விழா     03.03.2026 (செவ்வாய்க்கிழமை) வலி. தென்மேற்கு பிரதேச செயலகம், சண்டிலிப்பாய், வலிதென்மேற்கு பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபைகளுடன் இணைந்து நடத்தும் “கலாதரம் இதழ் -06”சண்டிலிப்பாய் பிரதேச மலர் நூல் வெளியீட்டு விழாவானது பிற்பகல் 01.45 மணியளவில் மானிப்பாய் மருதடி விநாயகர் கல்விக் கூட மண்டபத்தில், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரும், கலாசாரப் பேரவை, கலாசார அதிகாரசபைகளின் தலைவருமாகிய மதிப்பிற்குரிய திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம...

09
ஜன2026
 வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல் 

 வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல் 

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வீட்டுத்திட்டத்திற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கான முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பிரதேச செயலக அறிவித்தல் பலகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறிப்பிடப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளின் தெரிவு தொடர்பில் ஏதாவது ஆட்சேபனை இருப்பின் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் என்ற முகவரிக்கு 22.01.2026 க்கு முன்னர் எழுத்து மூலமான மேன்முறையீட்டினை நேரடியாகவோ...

07
நவ2025
கலை இலக்கிய விழா - 2025

கலை இலக்கிய விழா - 2025

  சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய கலை இலக்கிய விழா சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் இன்றைய தினம் (04.11.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு சண்டிலிப்பாய் சீரணி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் பண்டிதர் க.ஈஸ்வரநாதபிள்ளை அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான கலை இலக்கிய விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பிரதம...

07
நவ2025
பிரஜா ஹரசர - 2025

பிரஜா ஹரசர - 2025

  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரஜா ஹரசர - 2025 சமூக வலுவூட்டல் தேசிய மதிப்பீடு பாராட்டு விழா 28.10.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வங்கி ஹரசர - 2024ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி வங்கிகள் தரப்படுத்தலில் எமது பண்டத்தரிப்பு சமுர்த்தி வங்கியானது தேசிய நிலையில் இரண்டாவது இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தினையும் தனதாக்கிக் கொண்டது. வங்கியின் வெற்றிக்கும், வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட முகாமையாளர் மற்றும்...

07
நவ2025
ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் - 2025

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் - 2025

    ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2025 போட்டியில் எமது பிரதேச செயலகம் வெண்கல விருதினைப் பெற்றுக்கொண்டது. இவ் விருதினைப் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்           

18
செப்2025
புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் நிகழ்வு

புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் நிகழ்வு

இன்றைய தினம் (27.08.2025) காலை 9.15 மணியளவில் எமது புதிய பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன், தொடர்ந்து எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது.

24
ஏப்2025
ரூபா 01 மில்லியன் பெறுமதியான  வீடமைப்பு திட்டம் - 2025

ரூபா 01 மில்லியன் பெறுமதியான வீடமைப்பு திட்டம் - 2025

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான ரூபா 01 மில்லியன் பெறுமதியான  வீடமைப்பு திட்டம் - 2025 இற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் விபரம்

04
மார்2025
ரூபா 01 மில்லியன் மற்றும் 0.6 மில்லியன் பெறுமதியான  வீடமைப்புத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் விபரம்

ரூபா 01 மில்லியன் மற்றும் 0.6 மில்லியன் பெறுமதியான வீடமைப்புத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் விபரம்

  நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியுடனான இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான ரூபா 01 மில்லியன் மற்றும் 0.6 மில்லியன் பெறுமதியான வீடமைப்புத் திட்டம் - 2025

02
ஜன2025
"கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)"

"கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)"

  "கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு...!! 2025 ஆம் ஆண்டில் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல் நாளான இன்று அனைத்து உத்தியோகத்தர்களினதும் பங்கேற்புடன் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ வைபவங்கள் எமது பிரதேச செயலாளரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் இசைத்தல், இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக உயிர்த்...

தொலை நோக்கு

பிரதேச மக்களுக்கு உன்னதமான சேவை வழங்குதல்

பணி நோக்கு

அரசின் தேசிய கொள்கைகளுக்கிணங்க நிலைபேறான தன்மையை உறுதிசெய்வதுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறனான, பயனுறுதிமிக்க சேவையை வழங்குதல்
 
எமது பிரதேச செயலகம் ஒருபார்வை 
       
50 ஆண்டுகால  சேவையின்  பொன்விழா மையத் தடங்களை பதித்து வெற்றியின் சிகரமாய் திகழும் மாவட்ட செயலகம் தாய் என்றால் அது வளர்த்தெடுத்த பிள்ளைகள் பிரதேச செயலகங்கள். நவீனகரமான தொழில் ரீதியான உத்திகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்தின் ஊடாக மிகச்சிறந்த  வினைத்திறன் மிக்க பயன் உறுதிவாய்ந்த சேவையை வழங்குதல் என்பதை தூரநோக்காகக் கொண்டது  மாவட்ட செயலகம்,அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்  திட்டங்களின் வழி நின்று கிடைக்கப்பெறும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி மாவட்ட,  பிரதேச, கிராமிய மட்டத்தில் மக்களின் சமூகபொருளாதார  அபிவிருத்தியை  கட்டியெழுப்புதலும் அவர்களுக்கே உரித்தான கலை, கலாசார பண்பாடு விழுமியங்களை அடையாளப்படுத்தி ஆர்வப்படுத்தலும் மாவட்டசெயலகத்தின் ஊடாக நடைபெறுகிறது.ஓவ்வொரு பிரதேச செயலகங்களும் ஆற்றும் அளப்பரிய பணிகளால் ஒன்றிணைக்கப்பட்டு காலந்தோறும் பிரதேச செயலகங்களையும், பிரதேச செயலர்களையும் நிர்வாக ஒழுங்கமைப்பை கட்டுமாணத்துக்குள் வைத்து மாவட்ட செயலகம் தன்னை வளர்த்தெடுத்து வந்தது.மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களை நிதி, நிர்வாக, திட்டமிடல், கட்டுமாணப் பணிக்கு ஆற்றுப் படுத்தல், வளங்களைப் பகிர்ந்தளித்தல் அமைச்சு, திணைக்கள செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இலகுபடுத்தி செயற்படுத்தலை ஊக்குவிக்கிறது.
 
யாழ் குடாநாட்டின் சிறப்பான ஓர் பிரதேசம் வலிகாமம் ஆகும். இது யாழ் குடாநாட்டின் மிகப் பெரிய நிலத் திணிவாகவும் காணப்படுகின்றது. இது நிர்வாக ரீதியாக ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டமைந்துள்ளது. இதில் வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேச செயலகமும் ஒன்றாகும். இது சண்டிலிப்பாய் மத்தியில், யாழ்ப்பாணம்- கீரிமலை வீதியில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் வலிமேற்கு (சங்கானை) பிரதேச செயலகப்பிரிவுடன் இணைந்த நிலையில் இருந்தபோதும், மக்களுக்கான சேவையினை இலகுவாக வழங்கும் பொருட்டு சங்கானைப் பிரதேச செயலகத்திலிருந்திலிருந்து 1972ம் ஆண்டு பிரிக்கப்பட்டு 'சண்டிலிப்பாய் உதவி அரசாங்க அதிபர் பணிமனை' ஆக ஸ்தாபிக்கப்பட்டது. பின் 1992ம் ஆண்டு இது பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.திரு.மா.நடராசா, திரு.க.மகாதேவா, திரு.க.கோபாலரத்தினம், திரு.க.சண்முகநாதன,; திருமதி.சாந்தி திருநாவுக்கரசன், திரு.யு.ஞானசேகரம், திரு.க.சபாபதிப்பிள்ளை, திரு.ளு. சிவசம்பு, திரு.யு.ஏ.வு.தியாகராசா, திரு.க.கனகரத்தினம், திரு. ஹறக்டர்ஜோசப், திரு.து.வைத்திலிங்கம், திரு.நா.வேதநாயகன், திரு.யு.சுப்பிரமணியசர்மா, திருமதி.ரூபினிவரதலிங்கம், திரு.ப.ஜெகூ  திருமதி.ஏ.அன்ரன்யோகநாயகம், திரு.சு.முரளிதரன் (1977 – 2015) வரை பல்வேறான பிரதேச செயலாளர்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் தமது கடமைகளை மிகச் சிறப்பான பணிகளையாற்றியுள்ளனர். இன்று வரை திருமதி. உ.யசோதா அவர்கள் பிரதேச செயலராகக் கடமையினை சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கின்றார்.இப்பிரதேச செயலக பிரிவின் எல்லைகளாக வடக்கே மாதகல் கடற்பரப்பினையும், கிழக்கே வலிகாமம் தெற்குப் பிரதேச செயலர் பிரிவினையும், தெற்கே காக்கைதீவு, ஆனைக்கோட்டை கடற்பரப்பினையும், மேற்கே வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவினையும் கொண்டுள்ளது.50.2 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்ட இப் பிரதேச செயலகப்பிரிவானது துஃ129 –துஃ156  வரையான 28 கிராம அலுவலர் பிரிவுகளையும் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்ளடக்கியுள்ளது. இக் கிராம அலுவலர் பிரிவுகள் 69 கிராமங்களையும், பிரதேச சபை – 01, பிரதேச சபை உப அலுவலகங்கள் -03 ஆகியவற்றை கொண்டமைந்துள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேசம் நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சி ஆகிய உற்பத்திக் காரணிகளையும்; நிலம், நீர், கடல் மற்றும் மனித வளங்களையும் கொண்டு காணப்படினும் நீண்டகாலம் நிலவிய போர்ச்சூழ்நிலையால் அது சீர்குலைந்து தற்போது மீள் சீரமைக்கப்பட்டு வருகிறது. புகையிலை, வெற்றிலை, வெங்காயம், திராட்சை முதலான வர்த்தக உற்பத்திகள் இப்பிரதேசத்தில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 50445 அங்கத்தவர் தொகையினையும் 15453 குடும்பங்களையும் கொண்ட இப் பிரதேசத்தின் பிரதான தொழில்களாக விவசாயம், கடற்றொழில் என்பனவும், சிறு கைத்தொழில்களாக நல்லெண்ணெய் உற்பத்தி, பன்னைவேலை என்பனவும்காணப்படுகின்றன. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 47 அலுவலக உத்தியோகத்தர்களும்,27 கிராம அலுவலர்களும்,50 வெளிக்கள உத்தியோகத்தர்களும், 05 சமுர்த்தி முகாமையாளர்களும்,48 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 08 அலுவலகப் பணியாளர்களும்,32 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கடமை புரிகின்றனர். இவர்கள் அனைவரும் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர். வருடாந்தம் இவர்களின் செயலாற்றுகை தரம் கணிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் கிராம அலுவலர், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான பகுதி நாட் கூட்டமும், மாதாந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமும், விவசாய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமும், சிறுவர் கண்காணிப்பு சிறுவர் பாதுகாப்பு குழுக்கூட்டமும், உளசமூக அமைப்பு கூட்டமும், இடர் முகாமைத்துவக் கூட்டமும், அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கூட்டம், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையேயான கூட்டம் முதலானவை நிர்வாக செயற்பாடுகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தும் முகமாக நடாத்தப்பட்டு வருகின்றது.வருடாந்தம் பிரதேச ரீதியான தரவுகள் தொகுக்கப்பட்டு 'புள்ளிவிபரக்கைந்நூல்' மற்றும் 'பிரதேச மூலவளத் திரட்டு' என்பன தயாரிக்கப்படுகின்றன. இவை பிரதேச செயலக பிரிவின் தரவுகளைப் பெற உதவுகின்றன.  மேலும் மனிதவள சுயதொழில் பயிற்சியாக தச்சுத்தொழில், மின்னியல்தொழில், உணவு பதனிடுதல், பன்னைவேலை, கணினிப்பயிற்சி, குழாய் பொருத்துதல், தையல் பயிற்சி முதலான பயிற்சிகள் இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நிர்வாகத்தில் இப்பிரதேச செயலகம் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலாசாரம், சமயம் போன்ற அலகுகளிலும் பங்காற்றுகின்றது. பிரதேச, உலக சிறுவர் தினம், உலக முதியோர் தினம், பிரதேச செயலக கலாசார விழா, பதிவுசெய்யப்பட்ட கழகங்களக்கிடையிலான விளையாட்டு விழா, மகளிர் தினம் போன்றவற்றை விழாவாக நடாத்தி பிரதேசத்தின் பல கூறுகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் உத்தியோகத்தர்களுக்கிடையே குழுச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும்; முகமாக பொங்கல் விழா, ஒளிவிழா, நவராத்திரி விழா, சிரமதானம், வருட இறுதி ஒன்றுகூடல், பிரிவுபசார விழா, சித்திரை வருட களிப்பூட்டும் விழா போன்றவை வருடாந்தம் நடாத்தப்படுகின்றது.

 
பிரதேச செயலர்கள்..................................

dss tamil
 

பிரதேச செயலாளர்

 ds பெயர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி
கல்வித் தகைமைகள்
  • BSc (பொது பட்டம்)
  • பொதுநிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MA in Public Management)
  • இலங்கை நிர்வாக சேவை – தரம் I
பணி வரலாறு

பதவி

நிறுவனம் / இடம் காலம்
உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், கல்பிட்டி, புத்தளம் 01.01.2007 – 20.08.2009
உதவி அரசாங்க அதிபர் உதவி அரசாங்க அதிபர் அலுவலகம், மாந்தை மேற்கு, மன்னார் 21.08.2009 – 05.06.2011
உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம் 06.06.2011 – 28.01.2016
உதவி தலைமைச் செயலாளர் தலைமைச் செயலாளர் செயலகம், வடமாகாணம், யாழ்ப்பாணம் 29.01.2016 – 03.05.2016
மாகாண ஆணையாளர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வடமாகாணம், யாழ்ப்பாணம் 04.05.2016 – 19.10.2017
பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், துணுக்காய், முல்லைத்தீவு 20.10.2017 – 24.09.2019
பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி, யாழ்ப்பாணம் 25.09.2019 – 29.05.2025
பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு, சண்டிலிப்பாய் 27.08.2025 – இதுவரை

Assistant Divisional Secretary 

ads
பெயர்
திருமதி. சங்கீதா கோகிலதர்சன்
கல்வித் தகைமைகள்
  • இலங்கை நிர்வாக சேவை (SLAS) – தரம் III
  • பொதுநிர்வாக டிப்ளோமா
  • கலைமாணி (Bachelor of Arts), பேராதனைப் பல்கலைக்கழகம்
பணி வரலாறு

பதவி

நிறுவனம் / இடம் காலம்
SLAS பயிற்சி அதிகாரி SLIDA 23.01.2017 – 22.02.2018
பயிற்சி அதிகாரி பொதுச் சேவை ஆணைக்குழு, கொழும்பு 23.03.2018 – 20.08.2018
உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், தெல்லிப்பளை 21.08.2018 – 19.11.2024
உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் 19.11.2024 – இதுவரை

Accountant

 acct பெயர் திரு. லக்ஷ்மிதாசன் தருஹாசன்
கல்வித் தகைமைகள்

SLAcS

MPAM

PGDM

BBA (Hons)

பணி வரலாறு

பதவி

நிறுவனம் / இடம் காலம்
அபிவிருத்தி உத்தியோகத்தர் வடமாகாணம் 21.11.2004 – 31.07.2013
கணக்காளர் மாநகர சபை, யாழ்ப்பாணம் 01.08.2013 – 31.12.2015
கணக்காளர் மாகாண கல்வித் திணைக்களம், வடமாகாணம் 01.01.2016 – 21.09.2018
கணக்காளர் மாவட்ட பொது வைத்தியசாலை, யாழ்ப்பாணம் 22.09.2018 – 18.10.2022
கணக்காளர் மாகாண விவசாயத் திணைக்களம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம் 19.10.2022 – 23.01.2024
கணக்காளர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் 24.01.2024 – இதுவரை

Assistant Director of Planning 

  ddp பெயர்  திருமதி. சிறீரங்கன் திவாகரி
கல்வித் தகைமைகள்

 இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) – தரம் III

பணி வரலாறு
பதவி நிறுவனம் / இடம் காலம்
SLPS பயிற்சி அதிகாரி SLIDA 22.07.2019 – 09.02.2020
திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் மாவட்ட செயலகம், மன்னார் 10.02.2020 – 16.04.2020
திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் பிரதேச செயலகம், நானாட்டான் 16.04.2020 – 04.10.2023
திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் பிரதேச செயலகம், மன்னார் நகரம் 05.10.2023 – 14.03.2025
திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் 17.03.2025 – இதுவரை

Administrative Officer

   ao பெயர்  திரு. கந்தசாமி மதியழகன்
கல்வித் தகைமைகள்  பொ.த. சாதாரண தரம்
பணி வரலாறு
பதவி நிறுவனம் / இடம் காலம்
பொது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம், நல்லூர் 02.06.1993 – 17.06.2002
பொது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம், உடுவில் 18.06.2002 – 30.09.2015
பொது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம், நல்லூர் 01.10.2015 – 31.03.2021
பொது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம், யாழ்ப்பாணம் 01.04.2021 – 14.09.2021
நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் 15.09.2021 – இதுவரை

Additional District Registrar

 adr பெயர்  திருமதி. சுவர்ணா முத்தரசன்
கல்வித் தகைமைகள்
  • BSc விவசாயம்
  • நிறுவன முகாமைத்துவத்தில் MSc (Organizational Management)
பணி வரலாறு
பதவி நிறுவனம் / இடம் காலம்
மேலதிக மாவட்ட பதிவாளர் பிரதேச செயலகம், சங்கானை 05.08.2013 – 31.12.2019
மேலதிக மாவட்ட பதிவாளர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் 01.01.2020 – இதுவரை

Our approved staff and the actual staff during the year 2026 as follows:

30.01.2026
Ser. No. Designation Service Grade / Class Salary Code Service Level Approved Cadre Existing Cadre Number of Vacancies
1 Divisional Secretary SLAS 1 SL 1-2016 Senior 1 1
2 Asst. Divisional Secretary SLAS III/II SL 1-2016 Senior 1 1
3 Asst. Director/Deputy Director (Planning) SLPS III/II SL 1-2016 Senior 1  1
4 Accountant SLAcs III/II SL 1-2016 Senior 1 1
5 Administrative Officer MSO Supra MN 7-2016 Tertiary 1 1
6 Admin. Grama Niladhari Supra MN 7-2016 Tertiary 1  1
7 Translator (Sinhala-Tamil) (Tamil-English) Ts II/I MN 6-2016 Tertiary 2 1 1
8 Addl. District Registrar Reg S Class 3 Grade II/I MN 5-2016 Tertiary * 1 * 1
9 Development Co-ordinator AS III/II/I MN 4-2016 Secondary 1 1
10 Development Officer DOS III/II/I MN 4-2016 Secondary 11 12
11 Development Officer DOS III/II/I MN 4-2016 Secondary 30 36
12 Development Officer (2022 New Appointment) DOS III/II/I MN 4-2016 Secondary 19
13 Development Officer (Development) DOS III/II/I MN 4-2016 Secondary 39 41
14 Technical Officer SLTS III/II/I MN 3-2016 Secondary 1 1
15 Management Service Officer MSO III/II/I MN 2-2016 Secondary 27 25 2
16 Clerk MN 1-2016 Secondary 1
17 Grama Niladhari III/II/I MN 2-2016 Secondary 28 24 4
18 Information and Communication Technology Asst. SLICTS Class 3 Grade III/II/I MT 3-2016 Secondary 1 1
19 Technical Asst. Departmental III/II/I MT 1-2016 Secondary 1 1
20 Driver CDS III/II/I/ Special PL 3-2016 Primary 2 1 1
21 KKS OES III/II/I/ Special PL 1-2016 Primary 9 8 1
22 KKS OES III/II/I PL 1-2016 Primary 1 1
23 Office Labour Departmental III/II/I PL 1-2016 Primary 1 1
Total 160 176 13

Scroll To Top