News & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
பொலிஸ் நிலையங்கள்
| பொலிஸ் நிலையத்தின் பெயர் | முகவரி | தொலைபேசி இலக்கம் |
| மானிப்பாய் பொலிஸ் நிலையம் | யாழ்ப்பாணம் வீதி மானிப்பாய் | 021-2255160 |
| இளவாலை பொலிஸ் நிலையம் | பண்டத்தரிப்பு வீதி இளவாலை | 021-2211922 |
கண்ணோட்டம்
தொலை நோக்கு
பிரதேச மக்களுக்கு உன்னதமான சேவை வழங்குதல்பணி நோக்கு
அரசின் தேசிய கொள்கைகளுக்கிணங்க நிலைபேறான தன்மையை உறுதிசெய்வதுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறனான, பயனுறுதிமிக்க சேவையை வழங்குதல்எமது பிரதேச செயலகம் ஒருபார்வை
50 ஆண்டுகால சேவையின் பொன்விழா மையத் தடங்களை பதித்து வெற்றியின் சிகரமாய் திகழும் மாவட்ட செயலகம் தாய் என்றால் அது வளர்த்தெடுத்த பிள்ளைகள் பிரதேச செயலகங்கள். நவீனகரமான தொழில் ரீதியான உத்திகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்தின் ஊடாக மிகச்சிறந்த வினைத்திறன் மிக்க பயன் உறுதிவாய்ந்த சேவையை வழங்குதல் என்பதை தூரநோக்காகக் கொண்டது மாவட்ட செயலகம்,அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் வழி நின்று கிடைக்கப்பெறும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி மாவட்ட, பிரதேச, கிராமிய மட்டத்தில் மக்களின் சமூகபொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்புதலும் அவர்களுக்கே உரித்தான கலை, கலாசார பண்பாடு விழுமியங்களை அடையாளப்படுத்தி ஆர்வப்படுத்தலும் மாவட்டசெயலகத்தின் ஊடாக நடைபெறுகிறது.ஓவ்வொரு பிரதேச செயலகங்களும் ஆற்றும் அளப்பரிய பணிகளால் ஒன்றிணைக்கப்பட்டு காலந்தோறும் பிரதேச செயலகங்களையும், பிரதேச செயலர்களையும் நிர்வாக ஒழுங்கமைப்பை கட்டுமாணத்துக்குள் வைத்து மாவட்ட செயலகம் தன்னை வளர்த்தெடுத்து வந்தது.மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களை நிதி, நிர்வாக, திட்டமிடல், கட்டுமாணப் பணிக்கு ஆற்றுப் படுத்தல், வளங்களைப் பகிர்ந்தளித்தல் அமைச்சு, திணைக்கள செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இலகுபடுத்தி செயற்படுத்தலை ஊக்குவிக்கிறது.
யாழ் குடாநாட்டின் சிறப்பான ஓர் பிரதேசம் வலிகாமம் ஆகும். இது யாழ் குடாநாட்டின் மிகப் பெரிய நிலத் திணிவாகவும் காணப்படுகின்றது. இது நிர்வாக ரீதியாக ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டமைந்துள்ளது. இதில் வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேச செயலகமும் ஒன்றாகும். இது சண்டிலிப்பாய் மத்தியில், யாழ்ப்பாணம்- கீரிமலை வீதியில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் வலிமேற்கு (சங்கானை) பிரதேச செயலகப்பிரிவுடன் இணைந்த நிலையில் இருந்தபோதும், மக்களுக்கான சேவையினை இலகுவாக வழங்கும் பொருட்டு சங்கானைப் பிரதேச செயலகத்திலிருந்திலிருந்து 1972ம் ஆண்டு பிரிக்கப்பட்டு 'சண்டிலிப்பாய் உதவி அரசாங்க அதிபர் பணிமனை' ஆக ஸ்தாபிக்கப்பட்டது. பின் 1992ம் ஆண்டு இது பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.திரு.மா.நடராசா, திரு.க.மகாதேவா, திரு.க.கோபாலரத்தினம், திரு.க.சண்முகநாதன,; திருமதி.சாந்தி திருநாவுக்கரசன், திரு.யு.ஞானசேகரம், திரு.க.சபாபதிப்பிள்ளை, திரு.ளு. சிவசம்பு, திரு.யு.ஏ.வு.தியாகராசா, திரு.க.கனகரத்தினம், திரு. ஹறக்டர்ஜோசப், திரு.து.வைத்திலிங்கம், திரு.நா.வேதநாயகன், திரு.யு.சுப்பிரமணியசர்மா, திருமதி.ரூபினிவரதலிங்கம், திரு.ப.ஜெகூ திருமதி.ஏ.அன்ரன்யோகநாயகம், திரு.சு.முரளிதரன் (1977 – 2015) வரை பல்வேறான பிரதேச செயலாளர்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் தமது கடமைகளை மிகச் சிறப்பான பணிகளையாற்றியுள்ளனர். இன்று வரை திருமதி. உ.யசோதா அவர்கள் பிரதேச செயலராகக் கடமையினை சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கின்றார்.இப்பிரதேச செயலக பிரிவின் எல்லைகளாக வடக்கே மாதகல் கடற்பரப்பினையும், கிழக்கே வலிகாமம் தெற்குப் பிரதேச செயலர் பிரிவினையும், தெற்கே காக்கைதீவு, ஆனைக்கோட்டை கடற்பரப்பினையும், மேற்கே வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவினையும் கொண்டுள்ளது.50.2 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்ட இப் பிரதேச செயலகப்பிரிவானது துஃ129 –துஃ156 வரையான 28 கிராம அலுவலர் பிரிவுகளையும் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்ளடக்கியுள்ளது. இக் கிராம அலுவலர் பிரிவுகள் 69 கிராமங்களையும், பிரதேச சபை – 01, பிரதேச சபை உப அலுவலகங்கள் -03 ஆகியவற்றை கொண்டமைந்துள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேசம் நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சி ஆகிய உற்பத்திக் காரணிகளையும்; நிலம், நீர், கடல் மற்றும் மனித வளங்களையும் கொண்டு காணப்படினும் நீண்டகாலம் நிலவிய போர்ச்சூழ்நிலையால் அது சீர்குலைந்து தற்போது மீள் சீரமைக்கப்பட்டு வருகிறது. புகையிலை, வெற்றிலை, வெங்காயம், திராட்சை முதலான வர்த்தக உற்பத்திகள் இப்பிரதேசத்தில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 50445 அங்கத்தவர் தொகையினையும் 15453 குடும்பங்களையும் கொண்ட இப் பிரதேசத்தின் பிரதான தொழில்களாக விவசாயம், கடற்றொழில் என்பனவும், சிறு கைத்தொழில்களாக நல்லெண்ணெய் உற்பத்தி, பன்னைவேலை என்பனவும்காணப்படுகின்றன. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 47 அலுவலக உத்தியோகத்தர்களும்,27 கிராம அலுவலர்களும்,50 வெளிக்கள உத்தியோகத்தர்களும், 05 சமுர்த்தி முகாமையாளர்களும்,48 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 08 அலுவலகப் பணியாளர்களும்,32 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கடமை புரிகின்றனர். இவர்கள் அனைவரும் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர். வருடாந்தம் இவர்களின் செயலாற்றுகை தரம் கணிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் கிராம அலுவலர், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான பகுதி நாட் கூட்டமும், மாதாந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமும், விவசாய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமும், சிறுவர் கண்காணிப்பு சிறுவர் பாதுகாப்பு குழுக்கூட்டமும், உளசமூக அமைப்பு கூட்டமும், இடர் முகாமைத்துவக் கூட்டமும், அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கூட்டம், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையேயான கூட்டம் முதலானவை நிர்வாக செயற்பாடுகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தும் முகமாக நடாத்தப்பட்டு வருகின்றது.வருடாந்தம் பிரதேச ரீதியான தரவுகள் தொகுக்கப்பட்டு 'புள்ளிவிபரக்கைந்நூல்' மற்றும் 'பிரதேச மூலவளத் திரட்டு' என்பன தயாரிக்கப்படுகின்றன. இவை பிரதேச செயலக பிரிவின் தரவுகளைப் பெற உதவுகின்றன. மேலும் மனிதவள சுயதொழில் பயிற்சியாக தச்சுத்தொழில், மின்னியல்தொழில், உணவு பதனிடுதல், பன்னைவேலை, கணினிப்பயிற்சி, குழாய் பொருத்துதல், தையல் பயிற்சி முதலான பயிற்சிகள் இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நிர்வாகத்தில் இப்பிரதேச செயலகம் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலாசாரம், சமயம் போன்ற அலகுகளிலும் பங்காற்றுகின்றது. பிரதேச, உலக சிறுவர் தினம், உலக முதியோர் தினம், பிரதேச செயலக கலாசார விழா, பதிவுசெய்யப்பட்ட கழகங்களக்கிடையிலான விளையாட்டு விழா, மகளிர் தினம் போன்றவற்றை விழாவாக நடாத்தி பிரதேசத்தின் பல கூறுகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் உத்தியோகத்தர்களுக்கிடையே குழுச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும்; முகமாக பொங்கல் விழா, ஒளிவிழா, நவராத்திரி விழா, சிரமதானம், வருட இறுதி ஒன்றுகூடல், பிரிவுபசார விழா, சித்திரை வருட களிப்பூட்டும் விழா போன்றவை வருடாந்தம் நடாத்தப்படுகின்றது.
பிரதேச செயலர்கள்..................................
பிரதேச செயலர்கள்..................................

கிராம சேவகர் பிரிவு
| கிராம அலுவலர் பிரிவு இலக்கம் | கிராம அலுவலர் பிரிவு பெயர் | அலுவலக குறியீடு | புகைப்படம் | கிராம அலுவலர் பெயர் | தொடர்பு இல. | அலுவலக முகவரி | விடுமுறை தினம் | பதிற்கடமை பிரிவு |
| சுதுமலை வடக்கு | J/129 | 04-01-09-005 | ![]() |
பு.பிரகாஸ் | 0770791131 | தாவடி வீதி | ஞாயிற்றுக்கிழமை | J/130 |
| சுதுமலை தெற்கு | J/130 | 04-01-09-010 | ![]() |
ச.சங்கர்ராஜ் | 0771160394 | முள்ளி | ஞாயிற்றுக்கிழமை | J/129 |
| சாவற்கட்டு | J/131 | 04-01-09-015 | ![]() |
ப.சுஜீவன் | 0762000150 | சாவல்கட்டு |
ஞாயிற்றுக்கிழமை | J/129 |
| உயரப்புலம் | J/132 | 04-01-09-020 | ![]() |
பு.பிரகாஸ் | 0770791131 | குளப்பிட்டி வீதி | ஞாயிற்றுக்கிழமை | J/135 |
| ஆனைக்கோட்டை | J/133 | 04-01-09-025 | ![]() |
ச.சங்கர்ராஜ் | 0771160394 | ஆனைக்கோட்டை | ஞாயிற்றுக்கிழமை | J/131 |
| நவாலி வடக்கு | J/134 | 04-01-09-030 | ![]() |
யே.கீதாஞ்சலி | 0779151731 | நவாலி வடக்கு | ஞாயிற்றுக்கிழமை | J/136 |
| நவாலி கிழக்கு | J/135 | 04-01-09-035 | ![]() |
கு.எழிற்செல்வன் | 0750411069 | முருகமூர்த்தி கோயிலடி, நவாலி கிழக்கு | வெள்ளிக்கிழமை |
J/133 |
| நவாலி தெற்கு | J/136 | 04-01-09-040 | ![]() |
பி.நந்தரூபி | 0779037598 | கொட்டுக்கட்டி வீதி, நவாலி தெற்கு | ஞாயிற்றுக்கிழமை | J/134 |
| மானிப்பாய் வடக்கு | J/137 | 04-01-09-045 | ![]() |
மு.அருணன் | 0706226264 | ராஜகாரியார் வீதி | புதன்கிழமை | J/138 |
| மானிப்பாய் கிழக்கு | J/138 | 04-01-09-050 | ![]() |
லெ.அ.சுஹாசினி | 0701350200 | ஆனந்தா வீதி | ஞாயிற்றுக்கிழமை | J/137 |
| மானிப்பாய் தெற்கு | J/139 | 04-01-09-055 | ![]() |
நி.றஜிதா | 0776967053 | கனகசபை வீதி | ஞாயிற்றுக்கிழமை | J/140 |
| மானிப்பாய் மேற்கு | J/140 | 04-01-09-060 | ![]() |
பு.நிரூபன் | 0718474415 | கட்டுடை | வெள்ளிக்கிழமை | J/139 |
| சண்டிலிப்பாய் வடக்கு | J/141 | 04-01-09-065 | ![]() |
ஜீ.சஜீவன் | 0715588737 | சண்டிலிப்பாய் வடக்கு | ஞாயிற்றுக்கிழமை | J/144 |
| சண்டிலிப்பாய் மத்தி | J/142 | 04-01-09-070 | ![]() |
சி.சிவமேகலை | 0771868311 | கல்வளை வீதி | ஞாயிற்றுக்கிழமை | J/143 |
| சண்டிலிப்பாய் மேற்கு | J/143 | 04-01-09-075 | ![]() |
லோ.அருள்ராஜ் | 0776153867 | தேனிப்புளியடி | ஞாயிற்றுக்கிழமை | J/142 |
| மாகியப்பிட்டி | J/144 | 04-01-09-080 | ![]() |
சி.கிருஸ்ணசாந்தி | 0779587187 | மாகியப்பிட்டி | வெள்ளிக்கிழமை | J/141 |
| வடலியடைப்பு | J/145 | 04-01-09-085 | ![]() |
தே.விக்னபவன் | 0762983812 | அரசடி வீதி | வெள்ளிக்கிழமை | J/148 |
| பண்டத்தரிப்பு | J/146 | 04-01-09-090 | ![]() |
சு.ஸ்ரீறங்கன் | 0706625085 | பண்டத்தரிப்பு | ஞாயிற்றுக்கிழமை | J/147 |
| பிரான்பற்று | J/147 | 04-01-09-095 | ![]() |
ச.பவதாரணி | 0741671698 | தம்பித்துரை வீதி | ஞாயிற்றுக்கிழமை | J/146 |
| சில்லாலை வடக்கு | J/148 | 04-01-09-100 | ![]() |
செ.கிரிசாந் | 0779762025 | சில்லாலை வடக்கு, பண்டத்தரிப்பு | வெள்ளிக்கிழமை | J/149 |
| சில்லாலை தெற்கு | J/149 | 04-01-09-105 | ![]() |
சு.ஸ்ரீறங்கன் | 0706625085 | சில்லாலை தெற்கு | ஞாயிற்றுக்கிழமை | J/147 |
| மாதகல் கிழக்கு | J/150 | 04-01-09-110 | ![]() |
வ.விதுசா | 0767094623 | மாதகல் கிழக்கு | ஞாயிற்றுக்கிழமை | J/152 |
| மாதகல் தெற்கு | J/151 | 04-01-09-115 | ![]() |
க.சுதர்சன் | 0717474290 | பொன்னாலை வீதி | புதன்கிழமை | J/151 |
| மாதகல் மேற்கு | J/152 | 04-01-09-120 | ![]() |
க.சுதர்சன் | 0717474290 | புதன்கிழமை |
J/150 | |
| பெரியவிளான் | J/153 | 04-01-09-125 | ![]() |
த.பிறேமினி | 0774482363 | டச்சு வீதி, பெரியவிளான் | வெள்ளிக்கிழமை | J/155 |
| மாரீசன்கூடல் | J/154 | 04-01-09-130 | ![]() |
செ.பிரதீபன் | 0779587244 | ஞாயிற்றுக்கிழமை | J/155 | |
| இளவாலை | J/155 | 04-01-09-135 | ![]() |
செ.பிரதீபன் | 0779587244 | கல்லூரி வீதி | ஞாயிற்றுக்கிழமை | J/156 |
| முல்லானை | J/156 | 04-01-09-140 | ![]() |
கி.லயன்ஸ்றீகா |
0765629943 | முல்லானை | ஞாயிற்றுக்கிழமை | J/155 |
பதிவாளர் பிரிவு
| Division | Photo | Name | Designation | Address | Telephone Number |
|
Valikamam West |
![]() |
Mrs. Siyamala eraththinasegar |
Additional Marriage Registrar |
Main Rd Pandatharipu / Suthumalai, Manipay |
+94 779229379 |
| Manipay | ![]() |
Mrs.Rajani Sivakumar | Registrar of Births/ Deaths/Marriages | No.15, Memorial Lane, Manipay | +94 777351179 |
| Pandatharippu | ![]() |
Mrs.Judith Jobitha Newton | Registrar of Births/ Deaths/Marriages | Sillalai South, Pandatharippu | +94 779836023 |
பக்கம் 1 / 2

















































