வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வீட்டுத்திட்டத்திற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கான முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பிரதேச செயலக அறிவித்தல் பலகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளின் தெரிவு தொடர்பில் ஏதாவது ஆட்சேபனை இருப்பின் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் என்ற முகவரிக்கு 22.01.2026 க்கு முன்னர் எழுத்து மூலமான மேன்முறையீட்டினை நேரடியாகவோ அல்லது தங்களது பிரிவு கிராம அலுவலர் / அபிவிருத்தி உத்தியோகத்தர் / சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலமாகவோ சமர்ப்பிக்க முடியும்.

🟢 வீட்டுத்திட்டம் ஒன்றினை தான் பெற்றுக்கொள்வதற்கான தகுதியிருந்தும் முன்னுரிமையில் தவறவிடப்பட்டிருப்பின் அல்லது தகைமை மற்றும் புள்ளியிடலில் ஏதேனும் தவறுகள் இருப்பின் பிரதேச செயலகத்திற்கு முறையீடு செய்யமுடியும்.

🟢 இப்பட்டியலில் காணப்படுகின்ற பயனாளி ஒருவர் தகைமை மற்றும் புள்ளிகளில் தவறு காரணமாக முன்னுரிமைப்படுத்தப்பட்டிருப்பின் பிரதேச செயலகத்திற்கு முறையீடு செய்யமுடியும்

 

பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
சண்டிலிப்பாய் 

 

 01

 

 02

 03

04

Scroll To Top