ஜனாதிபதி அலுவலகத்தின் PS/SB/Circular/02/2025, 18.02.2025 ஆம் திகதிய சுற்றறிக்கையின் பிரகாரம், பிரதேச செயலகங்களில் உள்ள அலுவல்கள் பிரிவினை (Internal Affairs Unit – IAU) நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன் ஒரு பகுதியாக, எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவிற்கான முறையீட்டு பொறிமுறை 2026.09.25 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் (உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர்), பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் (நேர்மை அலுவலர்), நிர்வாக கிராம அலுவலர் (அங்கத்தவர்) மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் துணை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
- முறையீடுகளை முறையாகப் பெற்றுக்கொள்ளுதல்
- முறையீடுகளைப் பதிவு செய்து உரிய முறையில் கையாளுதல்
- நிறுவனத்தின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துதல்
- பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த பொதுச்சேவையை மேம்படுத்துதல்
என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இம்முறையீட்டு பொறிமுறை முன்னெடுக்கப்படுகிறது.
- அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்
- ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள்
- அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள்
- வேறு ஏதேனும் முறைகேடான செயற்பாடுகள்
தொடர்பான தகவல்களை உரிய முறையில் எமக்கு அறிவிக்கலாம். QR Code மூலமாகவும் முறைப்பாட்டைச் சமர்ப்பிக்கலாம்.
Contact No : 0761382634
WhatsApp: 0761382634
Mail Id : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.


















