🏆வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்க்கு வெள்ளி விருது!
வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகம், சண்டிலிப்பாய், 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில், அரச நிறுவனப் பிரிவில் “The Silver Award of Commendation” எனும் வெள்ளி விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவித்தல் ஆகிய துறைகளில் முன்னெடுக்கப்பட்ட சிறந்த செயற்பாடுகளைப் பாராட்டி, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது வழங்கும் நிகழ்வு 2026.10.19 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வில், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள், பிரதேச செயலகம் சார்பாக இவ்விருதினைப் பெற்றுக்கொண்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள இவ்விருது, செயலகத்தின் அர்ப்பணிப்பையும் கூட்டுமுயற்சியையும் பறைசாற்றும் பெருமைமிகு சாதனையாகும்.


















