725133481 2495877047538185 51386502591653638 n

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட, மக்களை மையப்படுத்திய நிர்வாகத்திற்கான "Citizen Mirror: Divisional Productivity Index - 1.0" போட்டியில் எமது பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

​நாடு முழுவதிலுமிருந்து 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றிய இந்த பிரம்மாண்டமான போட்டியில், எமது நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் சேவைக்கான அங்கீகாரமாக இவ்விருது கிடைத்துள்ளது.

​இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் வைபவம் நேற்றைய தினம் கொழும்பு Galle Face ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. எமது செயலகத்தின் சார்பாக கணக்காளர் மற்றும் உற்பத்திதிறன் அபிவிருத்தி அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு இந்த உயரிய விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

​எமது பிரதேச செயலகத்திற்கு பெருமை சேர்த்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்! மக்களின் சேவையில் எமது பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடும்

Scroll To Top