இலங்கை சமூகப் பாகாப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சமூகப் பாதுகாப்பு விருது (வடக்கு) - 2026 இற்கான  விருது வழங்கும் நிகழ்வு 2026.09.30 ஆந் திகதி வவுனியா ஹோட்டல் செல்வஜீவிதம் மண்டபத்தில் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பணச்சேகரிப்பு இலக்கை தேசிய மட்டத்தில் பூர்த்தி செய்து சிறப்பாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக எமது பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

எமது பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களுக்கு     “Tommorrow Just Free As Today” எனும் தொனிப்பொருளிலான தேசிய மட்ட சாதனைக்கான விருதுக் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் திருமதி.டட்ஷா கிருஷ்ணமேனன் அவர்கள் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றமைக்காகவும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.விஜயகோபால் மயூரன் அவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் விருதுக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விருது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக எமது பிரதேச செயலகத்திற்கு கிடைத்துள்ள தேசிய மட்ட அங்கீகாரமாக அமைந்துள்ளது.

WhatsApp Image 2026 10 01 at 9.08.55 AM

 

ஜனாதிபதி அலுவலகத்தின் PS/SB/Circular/02/2025, 18.02.2025 ஆம் திகதிய சுற்றறிக்கையின் பிரகாரம், பிரதேச செயலகங்களில் உள்ள அலுவல்கள் பிரிவினை (Internal Affairs Unit – IAU) நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன் ஒரு பகுதியாக, எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவிற்கான முறையீட்டு பொறிமுறை 2026.09.25 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் (உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர்), பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் (நேர்மை அலுவலர்), நிர்வாக கிராம அலுவலர் (அங்கத்தவர்) மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் துணை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

  • முறையீடுகளை முறையாகப் பெற்றுக்கொள்ளுதல்
  • முறையீடுகளைப் பதிவு செய்து உரிய முறையில் கையாளுதல்
  • நிறுவனத்தின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துதல்
  • பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த பொதுச்சேவையை மேம்படுத்துதல்

என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இம்முறையீட்டு பொறிமுறை முன்னெடுக்கப்படுகிறது.

  • அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்
  • ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள்
  • அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள்
  • வேறு ஏதேனும் முறைகேடான செயற்பாடுகள்

தொடர்பான தகவல்களை உரிய முறையில் எமக்கு அறிவிக்கலாம். QR Code மூலமாகவும் முறைப்பாட்டைச் சமர்ப்பிக்கலாம்.

Contact No : 0761382634

WhatsApp: 0761382634

Mail Id : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

WhatsApp Image 2026 10 01 at 9.40.15 AMWhatsApp Image 2026 10 01 at 9.39.57 AM

2026 ஆகஸ்ட் 04 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில், பத்தரமுல்லை, செத்சிறிபாய விளையாட்டு மைதான வளாகத்தில் “சுவாபிமானி திரிய  தேசிய உற்பத்திகள் – 2026” தேசிய மட்ட விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் அடிப்படையில், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கான  வேலைவாய்ப்புகளை உருவாக்கி,  சமூக  மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காக சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றது.01

இதற்காக தேசிய மட்ட விருது, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மதிப்பீட்டுப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக, சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜெ.சுசிலா மற்றும் மனிதவள வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.த.சுரேஷ்குமார் மற்றும் திருமதிஅ.குபின்ஸ்ரலா ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளின் திறமை, ஆற்றல் மற்றும் சுயநிறைவை ஊக்குவித்து, அவர்களை சமூகத்தின் சமமான பங்காளிகளாக முன்னேற்றுவதற்கான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

 

நேற்றைய தினம் 20.08.2026 வியாழக்கிழமை பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட மின்னொளி காரணமாக சில பொது மக்களுக்கு பார்வை தொடர்பான அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 40 பேர் வைத்தியசாலையை நாடியுள்ளதாகவும் அறியப்படுகிறது.

விசேட கண் வைத்திய நிபுணர் திரு.மலரவன் அவர்களின் ஆலோசனைக்கமைய, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக, நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய பொது மக்களும் தங்களது கண்களை அருகிலுள்ள வைத்தியசாலையிலோ அல்லது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் பொதுமக்களுக்கு உரிய அறிவித்தலை வழங்கி, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது கண்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, ஏதேனும் பார்வை தொடர்பான அசௌகரியம் இருப்பின் தாமதிக்காமல் வைத்தியசாலை சென்று கண் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இவ்வறிவித்தலை ஏனையவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்.

02

725133481 2495877047538185 51386502591653638 n

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட, மக்களை மையப்படுத்திய நிர்வாகத்திற்கான "Citizen Mirror: Divisional Productivity Index - 1.0" போட்டியில் எமது பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

​நாடு முழுவதிலுமிருந்து 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றிய இந்த பிரம்மாண்டமான போட்டியில், எமது நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் சேவைக்கான அங்கீகாரமாக இவ்விருது கிடைத்துள்ளது.

​இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் வைபவம் நேற்றைய தினம் கொழும்பு Galle Face ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. எமது செயலகத்தின் சார்பாக கணக்காளர் மற்றும் உற்பத்திதிறன் அபிவிருத்தி அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு இந்த உயரிய விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

​எமது பிரதேச செயலகத்திற்கு பெருமை சேர்த்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்! மக்களின் சேவையில் எமது பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடும்

Scroll To Top