வலிதென்மேற்கு பிரதேச நூல் வெளியீட்டு விழா

 

647235131 26206729352319500 1693332566838026305 n

 

03.03.2026 (செவ்வாய்க்கிழமை) வலி. தென்மேற்கு பிரதேச செயலகம், சண்டிலிப்பாய், வலிதென்மேற்கு பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபைகளுடன் இணைந்து நடத்தும் “கலாதரம் இதழ் -06”சண்டிலிப்பாய் பிரதேச மலர் நூல் வெளியீட்டு விழாவானது பிற்பகல் 01.45 மணியளவில் மானிப்பாய் மருதடி விநாயகர் கல்விக் கூட மண்டபத்தில், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரும், கலாசாரப் பேரவை, கலாசார அதிகாரசபைகளின் தலைவருமாகிய மதிப்பிற்குரிய திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சுபாஜினி மதியழகன் (செயலாளர் விவசாய அமைச்சு,
வட மத்திய மாகாணம்)அவர்களும், சிறப்பு விருந்தினராக 'சாகித்திய ரத்னா' ஐ.சாந்தன் அவர்களும்
கௌரவ விருந்தினர்களாக நவாலியூர். நந்தகுமார் சத்தியவாணி தம்பதியினர்களும் (இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) மதிப்பீட்டுரை நிகழ்த்துவதற்காகதிரு.நல்லையா விஜயசுந்தரம்
(பிரதம ஆசிரியர், வலம்புரி பத்திரிகை) என்பவர்களும் கலந்து சிறப்பித்து கொண்டனார்.
‘கலாதரம்'நூல் வெளியீட்டுடன் இணைந்ததாக 'அம்மாவீடு' பாலநாதன் ஐயா அவர்களின் கன்னிப் படைப்பான “திருவள்ளுவர் சிலை” திறந்து வைக்கப்பட்டது. கலாதரம் நூல் அட்டைப்படத்தை வரைந்த ஒவியர் இளம்கலைஞர் திரு.த கிருஷ்ணகுமார் (பிரதேச செயலக உத்தியோகத்தர்) அவர்களின் கௌரவிப்பு நிகழ்வும் , மங்கல வாத்திய இசைக்கலைஞர்களின் கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச கலை மன்றங்களின் நடன நிகழ்வுகளும் மற்றும் சிறப்பு நிகழ்வாக கலாபூஷணம் செ. உதயச்சந்திரன் குழுவினரின் இசை நாடகம் “ குந்தியின் செல்வன்” என்பனவும் இடம்பெற்றது.
மேலும் இவ் விழாவில் பிரதேச கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Scroll To Top