இலங்கை சமூகப் பாகாப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சமூகப் பாதுகாப்பு விருது (வடக்கு) - 2026 இற்கான விருது வழங்கும் நிகழ்வு 2026.09.30 ஆந் திகதி வவுனியா ஹோட்டல் செல்வஜீவிதம் மண்டபத்தில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பணச்சேகரிப்பு இலக்கை தேசிய மட்டத்தில் பூர்த்தி செய்து சிறப்பாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக எமது பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
எமது பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களுக்கு “Tommorrow Just Free As Today” எனும் தொனிப்பொருளிலான தேசிய மட்ட சாதனைக்கான விருதுக் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் திருமதி.டட்ஷா கிருஷ்ணமேனன் அவர்கள் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றமைக்காகவும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.விஜயகோபால் மயூரன் அவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் விருதுக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விருது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக எமது பிரதேச செயலகத்திற்கு கிடைத்துள்ள தேசிய மட்ட அங்கீகாரமாக அமைந்துள்ளது.













