2024
நலன்புரி நன்
மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்பட்டும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!!
1. விண்ணப்ப படிவத்தில் "அலுவலக பாவனைக்கு மாத்திரம்" என குறிப்பிடப்பட்டுள்ள பகுதி மற்றும் "விண்ணப்பதாரியின் கையொப்பம்" என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிக்கு கீழே உள்ள பகுதி ஆகியவற்றில் விண்ணப்பதாரரிகள் எதையும் எழுதக்கூடாது.
2. விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சகல கேள்விகளுக்கும் விண்ணப்பதாரி கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு முழுமையாக பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
3. விண்ணப்ப படிவத்தில் 01 ஆவது கேள்விக்கு "இல்லை" என்ற பதில் வழங்கினால் மட்டுமே 02 மற்றும் 03 ஆவது கேள்விகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை. ( HH இலக்கம் இல்லாதவர்கள் )
4. விண்ணப்ப படிவத்தில் உள்ள 05 மற்றும் 07 ஆகிய வினாக்கள் மட்டும் கட்டாயம் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் ஏனைய வினாக்களுக்கு வழமையாக விண்ணப்பதாரி பாவிக்கும் தமிழ் அல்லது சிங்கள மொழியில் எழுத வேண்டும்.
5. விண்ணப்பங்களை உங்கள் பகுதி பிரதேச செயலகத்தில் உள்ள நலன்புரி நன்மைகள் கிளையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். எவ்வாறாயினும் ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு விண்ணப்பம் மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
6. விண்ணப்பதாரியின் குடும்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இருப்பின் அவர்கள் அனைவருடைய பிறந்த திகதி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்படல் வேண்டும்.
7. விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரியின் அல்லது குடும்ப உறுப்பினரின் பாவனையில் உள்ள கையடக்க தொலைபேசி இலக்கம் கட்டாயம் குறிப்பிடப்படல் வேண்டும்
8. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறுக்கு (06) அதிகமாக இருப்பின் கோரப்பட்ட உறுப்பினர்கள் பற்றிய விபரத்தை குறிப்பிட்டு பின் இணைப்பாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
9. விண்ணப்பத்தை கையளிக்கும் போது அதன் கீழே உள்ள பகுதியை அதை கையேற்கும் உத்தியோகத்தர் மூலம் பூரணப்படுத்தி அவரின் கையொப்பத்தையும் பெற்று அப்பகுதியை வேறாக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.
10. விண்ணப்பங்கள் கையேற்கப்படும் இறுதித் திகதி 02/12/2024.
11. பொய்யான அல்லது பிழையான தகவலை வழங்கும் விண்ணப்பதாரி நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்கு விசாரணையில் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் சிறைத் தண்டனைக்கும் தண்டப்பணம் செலுத்துவதற்கும் ஆளாக நேரிடும் என்பதனை விண்ணப்பதாரரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பின்வரும் நபர்கள் அல்லது குடும்ப தொகுதியினர் அஸ்வெசும கட்டம் 02 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது.
மேலதிக தகவல்களுக்கு
எமது பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் கிளையை தொடர்பு கொள்ளவும்























