706257153 2472120999913790 5808782457085967339 n

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட J/150 மாதகல் கிழக்கு கடற்கரை பிரதேசத்தில் "கடலோர தூய்மைப்படுத்தல் தேசிய வேலைதிட்டம்" இன்று (23.05.2026) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய உதவிப்பிரதேச செயலாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக கிராம அலுவலர், சமுர்த்தி முகாமையாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அலுவலர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்,பிரதேச சபை ஊழியர்கள், சமூக மட்ட அமைப்புக்களது அங்கத்தவர்கள், கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

703519901 2472121543247069 9015149685225009133 n  703924611 2472121246580432 1980894262052004013 n  704006347 2472121476580409 6053286783414465899 n  704016990 2472121589913731 3896647468769755610 n

704267312 2472121829913707 8882722130751493852 n  704592354 2472121776580379 5713694795155923898 n  704914375 2472121666580390 285413780928634218 n  705031726 2472121313247092 1300821265707284284 n

705246975 2472121373247086 9128206200023217145 n  705464088 2472122013247022 7195801910102628382 n  705749217 2472121099913780 3001856471126113161 n  706318126 2472121719913718 747953671134384567 n

711474737 2481778745614682 8371369921050080577 n

Butterfly & Biodiversity Park ஆரம்ப நிகழ்வு

உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதேச செயலகம் – சண்டிலிப்பாய் வளாகத்தில் “Biodiversity Corner” அமைக்கப்பட்டு, Butterfly & Biodiversity Park உருவாக்கும் செயற்பாடு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாகக் கிராம அலுவலர், உதவி மாவட்டப் பதிவாளர், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்களும், அலுவலக உத்தியோகத்தர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இத்திட்டத்தின் மூலம் பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கை உயிரினங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இயற்கைச் சூழல் உருவாக்கப்பட்டு, உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கும் உயர்ந்த மனப்பாங்கு ஊக்குவிக்கப்பட்டது.

பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் தங்களது கரங்களால் பட்டாம்பூச்சிகளுக்கு நட்பான மற்றும் தேன் வழங்கும் தாவரங்களை நாட்டி, உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதற்கான தங்களது பங்களிப்பை வழங்கினர்.

711688071 2482433665549190 5163966186510623300 n   711729731 2482434178882472 9112593478767717532 n    716762819 2482434738882416 3573459050111039314 n   

710040087 2482434545549102 2991084708005788002 n   711466820 2482433678882522 2665257347049526694 n   714773883 2482434905549066 8785319857943582961 n   711737165 2482434568882433 1894795983938302795 n

656791825 2418979528561271 7728069973493285581 n

தேசிய உற்பத்தித்திறன் செயலகம், தேசிய புத்தாக்க முகவர் நிறுவனத்துடன் இணைந்து, 'உற்பத்தித்திறனுக்காக இளைஞர்களின் முன்யோசனைகள்' எனும் தொனிப்பொருளில் நடாத்தும் "Pro Youth" போட்டிக்காக, 16 -24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் எவரும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2026.03.31
இப் போட்டி பின்வரும் இரு பிரிவுகளில் இடம்பெறுகின்றது
1) செயற்திட்ட முன்யோசனைப் போட்டி - இளைஞர்களின் பார்வையில் எதிர்காலம்
2) AI காணொளி போட்டி - இளைஞர் எம் வாழ்விற்கு உற்பத்தித்திறன்
போட்டியின் உள்ளடக்கம் மற்றும் விதிமுறை தொடர்பான மேலதிக விபரங்களுக்கு மேலே இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலை பார்வையிடவும்.

covwe tamil

'சுரகிமு லங்கா'(இலங்கையை காப்போம்) தேசிய நிகழ்ச்சித் திட்டம்!'

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'சுரகிமு லங்கா' (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரச வளங்களை மிக சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளதுடன் இத் திட்டம் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

'செல்வச் செழிப்புமிக்க நாடு – அழகான வாழ்க்கை' எனும் தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் 'Clean Sri Lanka’ திட்டத்தின் ஒரு பகுதியாக, 'சுரகிமு லங்கா – ஒன்றிணைவோம் – ஒளியூட்டுவோம்' என்ற தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது.

இதற்காக அரச, அரச அனுசரணை மற்றும் தனியார் துறையினருடன் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே 'சுரகிமு லங்கா' திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர் மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரையும் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்களிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தில் இணையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு எமது பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

1000362671

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்படுகின்ற வினாடி வினா போட்டி

 

4ra5 kd3y 220310

 

 

கீழே தரப்பட்டுள்ள 20 வினாக்களுக்கும் விடைகளை எழுதி நாளை 06.03.2026 காலை 11.00 மணிக்கு முன்னராக எமது பிரதேச செயலக வரவேற்புக்கருமபீடத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

(வயது எல்லை இல்லை. விரும்பிய அனைவரும் பங்குபற்ற முடியும்)

போதைப்பொருள் குறித்த வினாடி வினா
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
 
1. உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
   
2. போதைப்பொருள் பயன்பாடு முதன்மையாக எந்த மனித உறுப்பைப் பாதித்து சிந்தனைத் திறனைக் குறைக்கிறது?
   a) இதயம்
   b) கல்லீரல்
   c) மூளை
   d) நுரையீரல்
   
3. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைத் தடுப்பதற்கான முக்கிய சட்டம் எது?
 
 
4. பின்வருவனவற்றில் எது போதைப் பழக்கத்திற்கு ஆளாவதற்கான காரணமாக இருக்க முடியாது?
   a) நண்பர்களின் அழுத்தம்
   b) மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல்
   c) விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி
   d) ஆர்வம் மற்றும் பரிசோதனை மனப்பான்மை
   
5. போதைப்பொருட்களை அதிக அளவில் கடத்தியதற்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனை என்ன?
   
6. போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்பு எது?
   a) இதயத் துடிப்பு குறைபாடு
   b) கல்லீரல் பாதிப்பு
   c) நரம்பு மண்டல பாதிப்பு
   d) மேற்கண்ட அனைத்தும்
   
7. போதைக்கு அடிமையானவர்கள் மீண்டும் நல்வாழ்வுக்கு வர உதவும் இடங்கள் எவை?
   a) சிறைகள்
   b) மறுவாழ்வு மையங்கள்
   c) மால்கள்
   d) விளையாட்டு அரங்குகள்
   
8. போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் பொதுவாக ஏற்படும் பாதிப்பு எது?
   a) பொருளாதார நெருக்கடி
   b) குடும்ப உறவுகளில் விரிசல்
   c) வன்முறை சம்பவங்கள்
   d) மேற்கண்ட அனைத்தும்
    
9. பின்வருவனவற்றில் எல்லாம் போதை தரக்கூடிய பொருட்கள் எவை?
   a) கஞ்சா
   b) ஹெராயின்
   c) பிரவுன் சுகர்
   d) மேற்கண்ட அனைத்தும்
   
10. சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வது பற்றி தகவல் தெரிந்தால், காவல்துறையின் எந்தப் பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும்?
 
11. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் ஒருவர் என்பதை அறிவதற்கான அறிகுறி எதுவாக இருக்கும்?
    a) நடத்தையில் திடீர் மாற்றம்
    b) நண்பர்கள் வட்டத்தில் மாற்றம்
    c) உடல் ஆரோக்கியத்தில் சரிவு
    d) மேற்கண்ட அனைத்தும்
    
12. போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான முதல் படி எது?
    
13. போதைப் பொருட்களுக்கு அடிமையான ஒரு நண்பரை எவ்வாறு அணுகி உதவ முயற்சிப்பீர்கள்?
    
14. "போதைப்பொருள் ஒழிப்பு" குறித்து ஒரு வாசகம் எழுதுக.
    
15. சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க செயல்படும் அமைப்பு எது?
    a) ஐக்கிய நாடுகள் சபை (UN)
    b) உலக சுகாதார அமைப்பு (WHO)
    c) போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் (UNODC)
    d) சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)
    
16. போதைப்போருள் மீண்டும் மீண்டும் பயன்படுத்த உடலில் அதிகளவு சுரக்கும் சுரப்பி எது?
 
    
17. ஒரு முறை மட்டும் போதைப் பொருள் உபயோகித்தாலும் போதை பழக்கம் வந்துவிடும் என்பது உண்மையா?
    a) உண்மை
    b) பொய் (சில பொருட்கள் மிக விரைவில் அடிமையாக்கும் தன்மை கொண்டவை, ஒருமுறை உபயோகித்தாலும் பழக்கம் வர வாய்ப்புண்டு)
    
18. மது மற்றும் புகையிலை போன்றவை போதைப் பொருட்கள் வகையைச் சேர்ந்தவையா?
    a) ஆம்
    b) இல்லை
    
19. போதைப்பொருள் பாவனை சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் யாவை?
    a) குற்றச் செயல்கள் அதிகரித்தல்
    b) இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாதல்
    c) பொருளாதார இழப்பு
    d) மேற்கண்ட அனைத்தும்
    
20. போதைப் பழக்கத்திற்கு ஆளான ஒருவரைப் பற்றி சமூகம் எந்த விதத்தில் சிந்திக்க வேண்டும்?
 
Scroll To Top