இன்றைய தினம் (27.08.2025) காலை 9.15 மணியளவில் எமது புதிய பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன், தொடர்ந்து எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது.

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான ரூபா 01 மில்லியன் பெறுமதியான வீடமைப்பு திட்டம் - 2025 இற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் விபரம்
තවත් කියවන්න: ரூபா 01 மில்லியன் பெறுமதியான வீடமைப்பு திட்டம் - 2025

"கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு...!!
2025 ஆம் ஆண்டில் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல் நாளான இன்று அனைத்து உத்தியோகத்தர்களினதும் பங்கேற்புடன் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ வைபவங்கள் எமது பிரதேச செயலாளரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய கீதம் இசைத்தல், இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்வதற்காக இரண்டு (02) நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துதல், கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka) உறுதியுரை வாசித்தல் போன்ற நிகழ்வுகளுடன் மு.ப 9.00 மணிக்கு சனாதிபதி செயலகத்திலிருந்து அனைத்து வெகுசன ஊடகங்கள் ஊடாக ஒளி / ஒலிபரப்பப்பட்ட Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் தேசிய விழாவுடன் இணைந்து கொண்டதுடன் கடந்த ஆண்டு எமது பிரதேச செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் இவ் வருடத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் "கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" என்ற கருப்பொருளை முன்னிறுத்தி தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் , வேலைத் திட்டங்கள் பற்றியும் அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமான பிரதேச செயலாளர் உரை, ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்களது வாழ்த்துரை மற்றும் உத்தியோகத்தர்களது கலைநிகழ்வுகள் போன்றன நடாத்தப்பட்டன.
தொடர்ந்து, சண்டிலிப்பாய் பிரதேச செயலக வரலாற்றில் முதல்முறையாக எமது பிரதேச செயலாளரது வழிகாட்டலில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வடிவமைக்கப்பட்ட "குறிப்புப் புத்தகம் (Note book)" உத்தியோகத்தர்களது பயன்பாட்டிற்காக எமது பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியுடனான
இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான ரூபா 01 மில்லியன் மற்றும் 0.6 மில்லியன் பெறுமதியான வீடமைப்புத் திட்டம் - 2025













