வலிதென்மேற்கு பிரதேச நூல் வெளியீட்டு விழா

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வீட்டுத்திட்டத்திற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கான முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பிரதேச செயலக அறிவித்தல் பலகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிடப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளின் தெரிவு தொடர்பில் ஏதாவது ஆட்சேபனை இருப்பின் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் என்ற முகவரிக்கு 22.01.2026 க்கு முன்னர் எழுத்து மூலமான மேன்முறையீட்டினை நேரடியாகவோ அல்லது தங்களது பிரிவு கிராம அலுவலர் / அபிவிருத்தி உத்தியோகத்தர் / சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலமாகவோ சமர்ப்பிக்க முடியும்.
வீட்டுத்திட்டம் ஒன்றினை தான் பெற்றுக்கொள்வதற்கான தகுதியிருந்தும் முன்னுரிமையில் தவறவிடப்பட்டிருப்பின் அல்லது தகைமை மற்றும் புள்ளியிடலில் ஏதேனும் தவறுகள் இருப்பின் பிரதேச செயலகத்திற்கு முறையீடு செய்யமுடியும்.
இப்பட்டியலில் காணப்படுகின்ற பயனாளி ஒருவர் தகைமை மற்றும் புள்ளிகளில் தவறு காரணமாக முன்னுரிமைப்படுத்தப்பட்டிருப்
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
சண்டிலிப்பாய்





சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரஜா ஹரசர - 2025 சமூக வலுவூட்டல் தேசிய மதிப்பீடு பாராட்டு விழா 28.10.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வங்கி ஹரசர - 2024ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி வங்கிகள் தரப்படுத்தலில் எமது பண்டத்தரிப்பு சமுர்த்தி வங்கியானது தேசிய நிலையில் இரண்டாவது இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தினையும் தனதாக்கிக் கொண்டது. வங்கியின் வெற்றிக்கும், வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2025 போட்டியில் எமது பிரதேச செயலகம் வெண்கல விருதினைப் பெற்றுக்கொண்டது. இவ் விருதினைப் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்
![]()
![]()














